பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கெஞ்சின் கினைவுகன்

காப்பியனர் தமது நூலில் தம் காலச் சமுதாயத்தை விரிக் கின்றாரே அன்றி அவர் இப்பிரிவை உடன்படுகின்றார் என்று கொள்ள முடியவில்லை. உடன்படுகின்றார் எனின் அவர் இவ்வொழுக்கத்தை, *

பேணு ஒழுக்கம்’

-தொல். இளம் கற். நூற்: 6; 9, 14.

‘கொடுமை ஒழுக்கம்’

-தொல். இளம். கற். நூற்: ;ே 28, 38.

என்றும், இவ்வொழுக்கத்தை மேற்கொண்ட பெருமை யும் உரனும் மிக்க தலைமகனே,

‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு

அகன்ற கிழவன்

-தொல். இளம் கற், நூற்: 8; 11

“நீத்த கிழவன்

-தொல். இளம் கற். நூற்: 9; 3?

‘அடங்கா ஒழுக்கத்து அவன்’

-தொல். இளம் கற். நூற்: 9; ே

“பிழைத்து வந்து இருந்த கிழவன்

-தொல். இளம் கற். நூற்: 9; 8

என்றெல்லாம் இழித்துக் கூறமாட்டார். தொல்காப்பி யனர் பரத்தமை ஒழுக்கத்தைக் கடிந்து கூறவில்லை என்ற கருத்து உண்மையற்றதாக மாறுகின்ற நிலையை இப்பகுதி கள் உணர்த்தி கிற்கின்றன. அகத்திணை இலக்கியங்களும் தலைமகன் பரத்தமை ஒழுக்கத்தை மேற்கொண்ட கிலையில் பிற பாடல்களைப் போல் பெருமை பேசுவனவாக அமை