பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையின் சிறப்பு 59

யாமல் ‘பரத்த’ என்று அவனை இழித்துக் கூறுகின்ற கிலே யையும் புலப்படுத்துகின்றன. எனவே, அகத்திணை ஒழுக் கங்கள் தம் காலச் சமுதாயத்தை விரிப்பதோடு அமைந்து விடாமல் தீய ஒழுக்கங்களைக் கண்டிக்கும் குறிக்கோள் இலக்கியங்களாகவும் துலங்குகின்றன.

சில வரம்புகள்

அகத்திணை இலக்கியங்கள் தமக்கெனத் தனி வரம்பு களே உடையன. புறத்திணை இலக்கியங்களில் இதுபோன்ற வரம்புகளைக் காண முடிவதில்லை.

1. அகத்திணே இலக்கியங்கள் பெரும்பாலும் ஐந்திணை அடிப்படையில் முதல், கரு, உரிப்பொருட்களைக் கொண்டு இலங்கும் தன்மையன.

3. அகத்திணை இலக்கியங்கள் தலைமகன், தலைமகள் இவர்தம் பெயர்களைச் சுட்டிக் கூறும் இயல்புடையன அல்ல. புறத்திணை இலக்கியங்களில் மட்டுமே இத்தகு இயல்பினைக் காண முடியும்.

3. தலைமகன் தலைமகளைப் பிரிந்து செல்லும் போது சில பிரிவுகளில் தலைமகளை உடன்கொண்டு செல் வான். சில பிரிவுகளில் தலைமகனை விடுத்துத் தான் மட்டுமே செல்வான். தலைமகளே உடன்கொண்டு செல்லுமிடத்துக் கடல்வழிப் பிரிய மாட்டான்.

4. மடல் ஏறுதல் ஆண்களுக்கே உரியது. பெண் களின் பொற்புக்கு மடல் ஏறுதல் ஏற்புடைய ஒன்று அன்று. -

5. எங்தக் காலத்திலும் தலைமகன்தான் தலைமகளைத் தேடி வருவானே ஒழியத் தலைமகள் தலைமகனை நாடிச்

செல்ல மாட்டாள்.