பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கெஞ்சின் நினைவுகள்

6. பாசறைக்கண் தலைமகனுடன் தலைமகள் செல்ல மாட்டாள். ஆல்ை புறப்பெண்டிர் செல்லுதல் நீக்கப்பட முடியாத ஒன்று. புறப்பெண்டிர் பாசறைக்கண் சென்று இன்பம் தந்த நிலையினை முல்லைப்பாட்டு உணர்த்துகிறது.

7. தலைமகன்தான் தன் வேட்கையைத் தலைவிக்கு உணர்த்துவான். தலைமகள் தாகைச் சென்று தலைமகனிடம் தன் வேட்கையைப் புலப்படுத்தியதாகச் செய்தியில்லை.

8. ஊடற் காலத்தில் தலைமகன் தலைமகள் அடி பணிவான்.

இதுபோன்ற சில மரபுகளைத் தம்முடையவாக்கிக் கொண்டு திகழும் சிறப்பினை அகத்திணை இலக்கியங். களில் மட்டும் தான் காண முடிகிறது. புறத்திணை இலக் கியங்கள் இது போன்ற மரபுகளுக்குள் தம்மை அடக்கிக் கொள்ளவில்லை.

தமிழக வரலாற்றில்

தமிழக வரலாற்றில் ஒவ்வொரு காலச் சமுதாயத் திலும் அகவொழுக்கம் தனக்கெனத் தனியிடம் பெற்றுப் பாடுபொருளாக விளங்கிய கிலேயைத் தமிழ் இலக்கிய வரலாறுகள் பாறைசாற்றுகின்றன.

தொல்காப்பியனர் காலத்திற்கு முள்னமேயே அக ஒழுக்கம் செம்மைப்பட்டிருக்கவேண்டும். எனவேதான் இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பும் இலக் கணிகள் பரம்பரையில் தோன்றிய தொல்காப்பியனர் தம் பொருளதிகாரத்தில் இவ்வொழுக்கத்தைப் பற்றி மிகுதி யாகப் பேசுகின்றார். பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களில் அகத்திணையியல், களவியல், கற்பியல், பொரு விரியல், மெய்ப்பாட்டியல், உவமவியல் முதலிய இயல்களில்