பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையின் சிறப்பு 41

அகப்பொருள் ஒழுக்கமே பேசப்படுகின்றது. செய்யுள் இயல் இலக்கிய வடிவம் பற்றிப் பேசும் இயலாக அமைந்த போதிலும் அங்கும் சில அக இலக்கிய மரபுகளை அமைக் கின்றார் ஆசிரியர் தொல்காப்பியர்ை. புறத்திணையியல் என்ற ஓர் இயலில் மட்டுமே பிறபொருளைப் பற்றி விரிக் கின் ருர். இதனை நோக்கும்போது மிகத் தொல்பழங் காலத்திலேயே அகவொழுக்கமானது செம்மையுற-சீர்மை யுறத் திகழ்ந்துள்ளது என்பதும், புலவர் பலரால் பாடும் தகைமையைப் பெற்றுச் சிறப்புடன் துலங்கியது என்பதும் புலகிைன்றன.

இனித் தொல்காப்பியத்தை அடுத்துச் சங்க இலக்கி யங்களை நோக்கும்போது அங்கும் அகமே பரந்த பாடு பொருளாகக் காணப்படுகிறது. எட்டுத்தொகை நூல் களில் அகாானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுங் தொகை, நற்றிணை என்று ஐந்து தொகை நூல்கள் அகம் பாடுவன. புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற இரண்டு தொகைகள் மட்டுமே புறம் புகல்வன. பரிபாடல் இரண் டையும் ஒருசேரக் கிளத்தும் பாங்கினது. பத்துப்பாட்டுள் குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி என்ற நான்கும் அக ஒழுக்கத்தையும் பேசு கின்றன. போர் பற்றிப் பாடும் புறநானூற்றிலும் காதல் ஒழுக்கம் பேசும் பல பாடல்களைக் காண முடிகிறது.

சங்க காலத்தை அடுத்து வரும் அற இலக்கியக் கால மான சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஆறு நூல்கள் அகம் கிளத்துவன. பொய்யில் புலவர் திருவள்ளுவர் இவ்வக ஒழுக்கத்தை 25 அதிகாரங்களில்-250 குறட்பாக்களில் மிக அழகாக விரித் தோதுகின்றார்.