பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நெஞ்சின் நினைவுகள்

இவ்வாறே சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற காப்பியங்களும் அகத்தை மறந்ததாகத் தெரியவில்லை. சிவக சிந்தாமணி துறவறம் கூறவந்த நூலாக இருந்தபோதும் அது மிகுதியாகப் பேசுவது காமவின்பத்தையே!

அடுத்து வரும் பக்தி இலக்கிய காலத்தில் தெய்வ பக்தி பாடுபொருளாக அமைந்தபோதிலும் ஆண்டவனையும் மானுடரையும் நாயகன் நாயகி பாவத்தில் வைத்துப் பாடும் போது அங்கும் அகப்பொருள் மரபே பின்பற்றப்படுகிறது . பக்திச்சுவை கனிசொட்டச் சொட்டப் பாடிய சேக்கிழாரும் தம் பெரியபுராணத்தில் சுந்தரர் பரவையின் காதலே மிக அழகாக விளக்குகின்றார்.

சிற்றிலக்கியங்களும் அகவொழுக்கத்தையே சிறப்பித்து நிற்கின்றன.

உரைநடையின் மறுமலர்ச்சிக் காலமான பத்தொன்ப தாம் நூற்றாண்டில் தோன்றிய சிறுகதை, காவல், நாடகம் போன்றவற்றையும் இவ்வகத்திணை ஒழுக்கம் ஆட்கொண் டுள்ளது.

சமுதாயச் சீர்கேடுகளைக் கண்டு சீறி எழுந்து,

‘விடுதலை விடுதலை விடுதலை

பறையருக்கும் இங்கு தீயர் புலைய ருக்கும் விடுதலை

பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை’

-பாரதியார் கவிதைகள் . தேசீய கீதங்கள்: 80; 1-2

என்று விடுதலை வேட்கையையும்,