பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையின் சிறப்பு 43

“என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்றெம தன்னைகை விலங்குகள் போகும்

என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்’

-பாரதியார் கவிதைகள். தேசீய கீதங்கள்: 28; 1.2

என்று சுதந்திர தாகத்தையும் ஏற்படுத்திய பாரதியும்,

காதல் காதல் காதல்

காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்’

-குயிலின் பாட்டு: 1-3

என்று பாடுகின்றார். இவர் வழிவந்த பாரதிதாசன் முதி யோர் காதலைக் கூட விட்டு வைக்கவில்லை. பாரதிதாச லுக்குப் பின்வந்த புதுக் கவிதை மரபினரும் கூட இவ்வக வொழுக்கம் பற்றிப் பேச மறந்ததாகத் தெரியவில்லை. ஏன்? இன்று மக்களால் பெரிதும் கவரப்பட்டு விரும்பப்படும் திரைப்படங்களில் கூடப் பெரும்பான்மையானவை இதனேயே கருவாகக் கொண்டு திகழ்கின்றன.

இப்படியாக ஒவ்வொரு காலத்திலும் தன் தன்மையை இமுக்காமல் தனக்கெனத் தனியிடம் பெற்றுத் திகழும் சிறப்பு அகத்திணைக்கே உரிய ஒன்றாகும்.