பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சின் நினைவுகள்

கடந்த காலத்தின் கினேவுகளில் தம் உள்ளங்களை இழந்து நிற்பது ஆறறிவு படைத்த உயிரினங்களின் இயல் பாகவே காணப்படுகின்றது. இந்த கினேவுகள் கெஞ்சிருக் கும் வரை வாழ்ந்து காட்டும் தன்மையவை. இவற்றில் நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் சில. கசக்கும் நினைவுகள் சில. நிகழ்காலத்தில் இன்பத்தைத் துய்ப் பவர்கள் தம் கடந்தகாலத் துன்ப நினைவுகளில் ஆழ்வதும், துன்பத்தை அனுபவிப்பவர்கள் இறந்தகால இன்ப நினைவு களில் ஆழ்வதும் இவ்வுலக இயற்கை. ஒரு தாய் தான் ஈன்றெடுத்த குழந்தைகளை வளர்த்ததில் தான் உற்ற இன்ப துன்பங்களின் நினைவுகளில் தன் உள்ளத்தை இழக்கின்றாள். ஒரு கணவனின் உள்ளமோ தன் மனைவி யுடனும் குழந்தைகளுடனும் கழித்த இளமைக்கால கினைவுகளில் ஊஞ்சலாடுகின்றது. அன்பால் பிணேப்புண்ட இரு நண்பர்களோ தம் பருவகால கினைவுகளில் நெஞ்சம் நெகிழ்கின்றனர். இப்படிப் பலர் பல சினேவலைகளில் அலைப்புண்டு நிற்பது இந்தக் காலத்திற்கு மட்டும் உரிய ஒன்று அன்று. அன்றுதொட்டே இந்த கிலே டிேத்து வருகின்றது. சங்கப் புலவர்களும் பல்வேறுபட்டவர்களின் கினைவோட்டங்களைத் தத்தம் பாடல்களில் வடித்துக் தங்துள்ளனர்.