பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நெஞ்சின் நினைவுகள்

மற்றாேர் செல்வமகள் பெற்றாேர் தனக்கொரு கல்வாழ் வினைத் தேடித்தரும் வரை காத்திருக்கவில்லை. அவள் தன் மனமொன்றிய மனளனுடன் வீட்டை விட்டு வெளியேறுகின்றாள். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? என்றார் வள்ளுவர். உண்டு என்பதுபோல் இவள் தன் பெற்றாேளின் அன்பிற்குத் தாழ் போட்டுவிட்டு வேறு ஒருவனின் அன்பை நாடி அவனுடன் சென்று விடுகின்றாள். அவள் சென்ற வழியோ மிகக் கொடியது. வேனிற். காலத்தில் மலைகள் மிகுந்த பகுதியில் அவள் அவனுடன் போக்கு நிகழ்த்துகின்றாள். இதனை அறிந்த தாயின் உள்ளம் நோகின்றது. அவள் தன் வீட்டில் வளர்ந்த நிலையை எண்ணிப் பார்க்கின்றாள். பாலையும் உண்ணுமல். பந்துடனும் செல்லாமல் தன் தோழியருடன் உளமொன்றி இன்பமாகப் பொழுதுபோக்கிய கினேவில் ஆழ்கின்றது அவள் உள்ளம்.

பாலும் உண்ணுள் பங்துடன் மேவாள் விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே எளிதென உணர்ந்தனள் கொல்லோ முளிசினை ஒமை குத்திய உயர்கோட்டு ஒருத்தல் வேனிற் குன்றத்து வெவ்வரைக கவாஅன் மழைமுழங்கு கடுங்குரல் ஓர்க்கும் கழைதிரங்கு ஆரிடை அவனெடு செலவே.

-குறுங்கொகை, 396,

தன்னைப் பெற்றவர்களின் அன்பை அலட்சியப்படுத்தி விட்டு எங்கிருந்தோ வந்தவனை நம்பி தன்னே அவனிடம் ஒப்படைத்து விடுகின்றாள். காதல் வாழ்வில் நம்பிக்கை மோசம் போய்விடுகின்றது. உறவு கொண்டவன் அதனே அறுத்துக்கொள்ள முனைகின்றான். அவள் தந்த உறவினே அவன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றான். அவனுடன் அவள்