பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சின் கினைவுகள் 47”

கொண்ட உறவோ அவர்கள் இருவருக்கும் தவிர நாரை ஒன்றுக்குத்தான் தெரியும். அதுவும் சாட்சி சொல்ல வராது. அவன் சொல் திறம்பிய நிலையில் அவள் என்ன செய்வாள்? இரக்கத்திற்குரிய தன்னிலையை கினைந்து கெஞ். சம் கினைக்கின்றாள்.

யாரும் இல்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால ஒழுகுநீர் ஆரல் பார்க்குங் குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.

-குறுந்தொகை: 25..

தன் தவற்றை கினைந்தும், கடந்த கால நினைவுகளில் தன் நெஞ்சைச் செலுத்தியும் துயருறும் இக்காதலியைக் கபிலர் காட்டுகின்றார்.

அவன் ஆண்மை மிக்கவன். எனவேதான் அவன் தன் பெற்றாேர் தேடி வைத்த செல்வத்தைக் கொண்டு தன் வாழ்க்கையை கடத்த விரும்பவில்லை. தன் உழைப்பின் விளைவினைக் கொண்டே வாழ விழை கின்றான். உலகியல் கடமைகளை உணர்ந்த அவன் தன் அன்பு மனைவியைப் பிரிந்து பொருள் தேட வேற்று. நாடு செல்கின்றான். சென்றவன் நெடுநாள் தங்கிப் பொருளை ஈட்டி மீண்டு வந்து தன் இல்லறக் கடமை களே ஆற்றுகின்றான். நாள் பல கழிகின்றன. கடமை கெஞ்சத்தினன்ை அவன் உள்ளம் மீண்டும் பொருள்தேடிச் செல்ல விரும்புகின்றது. உடனே அவன் தன் உள்ளத்தை கோக்கி வேற்று நாட்டில் தான் அன்பு மனைவியின் நினைவில் ஏங்கி நின்ற நிலையைக் கூறித் தன் செலவினைத் தவிர்க்க முயல்கின்றான்.