பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெஞ்சின் நினைவுகள் 49.

இருந்து கண்ட காட்சியை விளக்கி அவன் செலவினைத். தடுக்கின்றாள் தோழி.

செம்புலப் பெயல்நீர் போல நெஞ்சங் கலந்த இருவர். பெற்றாேர் திருமணத்திற்கு உடன்படாத கிலேயில் உடன்போக்கு நிகழ்த்துகின்றனர். போக்கு நிகழ்த்தும் இவர்களை வழியில் சிலர் காணுகின்றனர். அவர்கள் இவர் களுக்கு முன்பே அறிமுகமானவர்கள். எனவேதான் இன்று மணமக்களாக இருந்து மகிழும் கிலேயைக் கண்டு அவர்கள் இவர்தம் இளமைக்காலச் செயல்களில் தம் நினைவுகளைச் செலுத்தி விதியை வியந்து கிற்கின்றனர்.

இவன்.இவள் ஐம்பால் பற்றவும் இவள்இவன் புன்தலை ஓரி வாங்குள் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது ஏதில் சிறுசெரு உறுப மன்ளுே; நல்லை மன்றம்ம பாலே மெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்னஇவர் மணமகிழ் இயற்கை காட்டி யோயே.

-குறுந்தொகை: 329,

இளமைக் காலத்தில் அவன் அவள் கூந்தலைப் பற்றி இழுக்கவும், அவள் அவன்தன் தலை முடியை இழுத்துவிட்டு ஒடவும், அன்பைப் பெய்து வளர்க்கும் செவிலியர் விலக்க வும் விலகாமல், காரணமின்றிச் சண்டைகளேச் செய்து கின்ற இவர்களே இப்போது விதி கணவன் மனேவியாக்கியது என விதியை வியக்கின்றனர்.

இவ்வாருகச் சங்கப் புலவர்கள் நிகழ்காலத்தின் புதிய வார்ப்புகளை நெஞ்சம் மறக்காத கடந்த காலத்தின் கினைவு. கஅளக்கொண்டு செம்மையாகவும், தெளிவாகவும் வார்த்துத் தருகின்றனர்.