பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழர் வானியல் அறிவு

“கல்தோன்றி மண்தோன் ருக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று தமிழ்க்குடியின் பழமை யும் வீரமும் பாராட்டப்பட்டுள்ளது. உலக நாகரிகம் வளர்ந்த தொட்டில் என்று தமிழகத்தை அறிஞர் அழைப்பர். வரலாற்றுக் காலத்திற் குத் தொன்னெடுங் காலத்திற்கு முன்பே தமிழர், சமுதாயம் கண்டு வாழ்ந்தனர். அவர்களின் பீடுமிக்க பெருவாழ்வினைச் சிறக்கப் பேசுவன வாய்ச் சங்க இலக்கியங்கள் துலக்கமுறுகின்றன. முச்சங்கங் கண்டு மொழி வளர்த்த பெருமை பாண்டியர் பழங்குடிக்கு உண்டு. சங்கப் புலவர் பலர் தம் சீரிய சிந்தனைகளைப் பாடல்களாகப் பாடிச் சென்றிருக்கிறார்கள்.

இன்று கிடைக்கக்கூடிய நூல்களில் முற்பட்ட நூல் தொல்காப்பியம். இந்நூல் எழுத்து, சொல் என்ற இரண்டிற்கேயன்றிப் பொருளுக்கும் இலக்கணம் வகுத் துள்ளது. பழந்தமிழர் வாழ்ந்த வாழ்க்கை நெறிகள் பொருளதிகாரத்தாற் புலப்படும். பழந் தமிழர்தம் பீடு நிறைந்த அகவாழ்வும் புறவாழ்வும் தொல்காப்பியத்தால் துலக்கமுறும்.

பாட்டும் தொகையும் பழந்தமிழ் இலக்கியங்களாகக் கருதப்படும். பாட்டென்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். திருமுரு