பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நெஞ்சின் கினைவுகள்

தோன்றினும், தென்திசைக் கண்ணே வெள்ளி போக்குறி னும் வயலிடம் விளைவு மிகப் புதலிடத்துப் பூமலர’ எனப் புறநானூற்றின் பழைய உரையாசிரியர் மேற் கானும் அவர் பாடல் தொடருக்கு விளக்கங் கண்டிருப் பதனை நோக்குங்கால், நம் முந்தையோரின் வான நூலறிவு தெற்றெனப் புலப்படும். மேலும் பிறிதோர் உண்மையும் இப்பாட்டிற் சுட்டப்படுகின்றது. பாரியின் பறம்புமலை காட்டில் இயற்கையில் இத்தகைய உற்பாதங்கள் தோன்றி லுைம் பாரியின் கொடை காரணமாக வரும் அரசாட்சிச் சிறப்பில்ை அந்நாட்டில் தீமைகள் பெருகாமல் மாருக கன் மைகள் கிறைந்து வளம் மிகுந்த பயிர்கள் செழிக்கும் எனப் புலனழுக்கற்ற அந்தணுளராம் கபிலர் குறிப்பிட் டிருப்பது தகவுடைய ஆட்சியின் சீர்மையை எடுத்துரைக் கிறது.

இப்பாடலிற் பாரிவேள் பாராட்டப் பெற்றிருப்பது போலவே காவிரி புரக்கும் நாடு கிழவோன் ஒருவனும் பொருத்தமுறப் பாராட்டப் பெற்றுள்ளான். ‘விளங்கிய சுடரையுடைய ஞாயிறு (சூரியன்) நான்கு திசைகளிலும் தோன்றிலுைம், விளங்கிய கதியையுடைய வெள்ளி மீன் தென்திசைக் கண்ணே சென்றாலும், கவலையில்லை. அங் நாட்டை அழகிய குளிர்ந்த காவிரி ஆறு வந்து பல காலாய் ஒடி ஊட்டும்’ என்ற கருத்தமையப் புலவர் வெள்ளைக் குடி நாகனர் பாடியுள்ள புறப்பாடற் பகுதி வருமாறு:

“அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்துகவர் பூட்ட”

  • . -புறநானூறு; 85; 6-8.