பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழர் வானியல் அறிவு 55

இப்பாடற் பகுதிக்கு ஒத்த நிலையில்,

‘திசையிரு நான்கும் உற்கம் உற்கவும்

வெங்கதிர்க் கனலி துற்றவும்’

-புறநானூறு: 41; 4-7.

என்ற பகுதியும் ஒப்புநோக்கத்தக்கது. இதலைன்றாே புலவர் எருக்காட்டுர்த் தாயங்கண்ணனர்,

“தெறுகதிர்க் கனலி தென்திசை தோன்றினும்

என்னென் றஞ்சலம் யாமே”

-புறநானூறு: 397; 34-25. என்றார்.

வடமீன் என்பது அருந்ததி நட்சத்திரம். கற்பு நிறை யுடையாரை வடமீன் புரையும் கற்பினர் என்று சிறப் பித்துக் கூறுவது,

‘வடமீன் புரையும் கற்பின் மடமொழி’

-புறநானூறு; 133 : 8.

என்ற புறப்பாடல் தொடரால் மட்டுமின்றி,

“தீதிலா வடமீனின் திறம் இவள்திறம்’

-சிலப்பதிகாரம்-மங்கல வாழ்த்துப் பாடல்: 37.

என்ற சிலப்பதிகாரத் தொடராலும் தெரிய வரலாம்.

அனைத்திலும் மேலாக ஈண்டுச் சிறப்பாகக் குறிக்கத் தக்க செய்தி, கணியன் பூங்குன்றன் என்ற புறநானூற்றப் புலவர் பெயராகும். கணியன் என்றால் கணக்கு வல்லவன்

ஆவன். என்ன கணக்கு புறப்பொருள் வெண்பா மாலை