பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கெஞ்சின் கினைவுகள்

‘விளைவெல்லாம் கண்ணியுரைப்போன் கனி’

-புறப்பொருள் வெண்பா மாலை.

இவர் இயற்றியுள்ள புறநானூற்றுப் பாடலாம் ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற பாடல் (புறங்ானூறு: 193) தமிழர் தம் தெளிந்த உலகச் சிந்தனையின் முழுவடிவ மன்றாே?

புறநானுாற்றின் 339ஆம் பாடலைப் பாடிய புலவர் பெருந்தகை கூடலூர் கிழார் ஆவர். இவர் பாடியுள்ள அப் பாடலில் வானநூற் கருத்துகள் பல பொதிந்து காணப் படுகின்றன. அப்பாடற் பகுதி வருமாறு:

‘ஆடியல் அழற்குட்டத்து ஆரிருள் அரையிரவில் முடப்பனையத்து வேர் முதலாக் கடைக் குளத்துக் கயம்காயப் பங்குனி உயர் அழுவத்துத் தலைநாண்மீன் நிலைதிரிய நிலைநாண்மீன் அதன்எதிர் ஏர்தரத் தொன்ண்ைமீன் துறைபடியப்

பாசிச் செல்லாது ஊசி முன்னது அளக்கர்த்திணை விளக்காகக்

கனஎரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி ஒருமீன் விழுந்தன்றால் விசும்பி ஞனே’

- புறநானூறு; 329: 1.12.

இப்பாடற் பகுதிக்குப் பழைய உரையாசிரியர் எழுதியுள்ள உரை வருமாறு: