பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நெஞ்சின் நினைவுகள்

அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே

ஒண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித் தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ”

- புறநாநூறு; 323; 13-34.

இப்பாடல் கொண்டு நாள்மீன் வீழலால் மன்னன்

உயிர்மாயும் என்ற வான நூலறிவு வாய்த்திருந்தவர் தமிழர் என அறியலாம்.

இதுகாறும் எடுத்துக்காட்டிய ஒருசில சான்றுகளால் பழந்தமிழரின் வானநூற் புலமை ஒருவாறு கண்டோம். இன்னும் பல சான்றுகள் உள. அவை விரிப்பின் பெருகும் என்பதால் இவ்வளவோடு அமைகிறேன்.