பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்தில்

சில நகைச்சுவைக் காட்சிகள்

மனிதனே, வேறு உயிரினத்திலிருந்து பிரித்துக் காட்ட உதவும் சிறப்பு நகைச்சுவைக்கு உண்டு. இதன் பெருமை கருதியே தொல்லாசிரியராம் தொல்காப்பியனர் எட்டுவகை மெய்ப்பாடுகளுள் இதற்கு முதன்மை இடம் தந்து,

“நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப’

-தொல்; மெய்ப்பாட்டியல் : 3. என்று கூறியுள்ளார்.

நகைச்சுவை தோன்றுவதற்குரிய சூழல்களையும் இதே பெருமகனர் உரைத்துள்ளார். எள்ளுதல், இளமை, அறி வின்மை, மடமை ஆகிய காரணங்களில்ை நகைச்சுவை தோன்றும் என்றார்.

இனி, நகைச்சுவைக் காட்சிகள் சிலவற்றைப் பார்ப் போம். சிறுவன் ஒருவன், வீட்டுவாசலில் தன்னை மறந்து விளையாடிக்கொண்டிருக்கின்றான். அவனைச் சுற்றி யாரும் இல்லாததைக் கண்ட பெண்ணுெருத் தி அவனைப் பார்த்துப் பார்த்துப் பூரிப்படைகிருள். அப்பொழுது அச்சிறுவனின்