பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. நெஞ்சின் நினைவுகள்

தாய், தான் மறைந்திருந்த இடத்திலிருந்து வெளிப்பட்டு, “யுேம் இவனுக்குத் தாய்தானே!’ என்று கூறிள்ை. அதனைக் கேட்ட அப்பெண், பொருளேக் கள வாடிய திருடன் பிறர் கையில் அகப்பட்டால் எப்படி விழிப் பானே அப்படி விழித்தாள். ஏன்? அச்சிறுவன் தாய்க்கு, தான் அவள் கணவனின் காதலி என்ற மறை புலப்பட்டு விட்டதே என்பதுதான்; அப்போது அவள் தவித்த தவிப்பினை நினைத்து நினைத்துச் சிறுவனின் தாய் சிரித்த செயல் இருக்கிறதே அது படிப்பவர்க்குப் பல உண்மைகளை எடுத்துரைக்கவல்லது. இந்தக் காட்சி, சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது.

‘மாசில் குறுமகள் எவன்பே துற்றனை

நீயும் தாயை இவற்கென யான்தன் கரைய வந்து விரைவனென் கவைஇக் களவுடம் படுநரில் கவிழ்ந்து நிலங்கிளையா நாணி கின்றாேள் நிலைகண்டு யானும் பேணினென்’

-அகம், 16 : 12-16.

என்ற அடிகளில் அக்காட்சியைக் கண்டு மகிழலாம்.

கன்னிப்பருவம் அடைந்த காரிகையொருத்தி, கட்டி ளங்காஆள யொருவனுடன் காதலுணர்வு கொள்கிருள். அவள் சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் மாறுபாடு காணப்படுகிறது. அவள் எதனையோ கண்டு அஞ்சிய தாகத் தாய் கினைக்கின்றாள். எனவே அவளே இயல்பான மனநிலைக்குக் கொண்டுவரக் கட்டுவிச்சியை அழைக்கின் முன். அவளோ நோயின் காரணத்தை ஆராய்வதற்கு முன்னல் குறிஞ்சிநிலக் கடவுளான முருகப் ‘பெருமானின் மலைவளம் கூறி வழிபடுகின்றாள். முருகனின் மலையும்,