பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்தில் சில நகைச்சுவைக் காட்சிகள் 61

காரிகை விரும்பிய காதலனின் மலையும் ஒன்றே. தான் மனத்தில் கருதியுள்ள தலைவனின் மலைவளம் பேசப்படு வதையே கினைத்தாள் அவள். தான் இருக்கும் சூழலையும் மறந்தாள. “பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே அவர் கன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே’ என்று கட்டுவிச்சியிடம் கூறினுள். அம்மூதாட்டியும் அவர்’ என்று தலைவி கூறிய முறையினையும், மன நிலையினையும், மகிழ்ச்சியினையும் கண்டு அவள் காதலில் கவிழ்ந்தாள் என்று தாய்க்குக் குறிப்பாக உணர்த்தினள். அங்கிலையில் தலைவி, தான் அகப்படடுக் கொண்ட திறத்தினை எண்ணித் தனக்குத் தானே கைத்துக் கொண்டிருப்பாள். அந்தச் குழ்நிலையை ஆழ்ந்து நோக்குபவர்களுக்கு அறிவோடு கூடிய சிரிப்பு வரும்.

“அகவன் மகளே அகவன் மகளே

மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே; பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே’

-குறுந்தொகை -33.

என்பது பாடல்.

திருக்குறளில் நகைச்சுவை விருந்து நல்கும் ஒரு பாடலை நோக்குவோம். ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்களே மிகவும் கவர்ந்த குறள் அது. பாடலை மேலெழுந்த வாரியாகப் படித்தால் மாறுபட்ட கருத்தைப் போல் தோன்றும். சற்று ஊன்றிப் படித்தால் நகைச்சுவை, புலப்படும்.

யாருடைய நட்பு இனிமையைக் கொடுக்கும்? முட்

டாள்களுடைய நட்புத்தான்; ஏன்? ஏனென்றால் பிரிகின்ற போது அது துன்பமே தராது. எந்தவிதப் பாதிப்பினையும்