பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 நெஞ்சின் கினைவுகள்

ஏற்படுத்தாது என்கிறார் வள்ளுவர். உண்மைதானே, கல்ல வர்களோடு பழகிவிட்டுப் பிரிய நேருகின்றபொழுது எவ் வளவு வருத்தப்படுகிருேம்? எனவே வருத்தப்படாத வகை யில் பிரிய வேண்டுமானல் முட்டாள்களோடு பழகவேண் டும் என்று கேலியாக வள்ளுவர் கூறுவதில் அறிவுடம் பட்ட நகைச்சுவை இருப்பதைக் காணலாம்.

“பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன்று இல்’

-திருக்குறள்-840.

என்பது அக்குறள்.

முத்துக்கள் பலவற்றை ஒன்றாகச் சேர்த்த ஆரம் போல் விளங்கும் முத்தொள்ளாயிரத்திலிருந்து ஒரு காட் சியை நோக்குவோம், சேரவேந்தன் ஒருவன் வீதியில் உலா வருகின்றான். அவனைக் கண்டு எங்கே தன் மகள் மையல் கொண்டு விடுவாளோ என்று அச்சத்தாலும் விரைவாலும் வாசற்கதவினை ஓங்கிப் படார்’ என்று சாத்துகின்றாள் தாய். அந்த விரைவிற்குக் காரணம் உண்டு. தான் இளையவளாக இருந்தபோழ்து மன்னவனைக் கண்டு காமுற்றுப் பின் சோர்ந்து வாடி வருத்தமுற்றி ருக்கிருள். இளமைத்துடிப்பில் இத்தகைய எண்ணங் கள் வந்து போவது இயல்பே; ஆடவன் ஒருவனேக் திருமணம் செய்து கொண்டபின் அந்தப் பழைய கினேவுகள் யாவும் பஞ்சாய்ப் பறக்கின்றன. தான்பட்ட துன்பத் தினைத் தன் மகள் படக் கூடாதே என்பதற்காகவே மன்னவன் வருகிருன் என்பதனையும் மறந்து கதவினேத் திறவாமல் அடைக்கவே செய்கிருள். ஆல்ை தாயன்பைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அந்த இளம்வயதில் அப்பெண் னுக்கு உண்டா? இல்லவே இல்லே அன்றாே தாய் அடைத்த கதவினை, மகள் திறக்கின்றாள். அதுவும்