பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்தில் சில நகைச்சுவைக் காட்சிகள் 65.”

மெல்லத் திறக்கின்றாள். தாய், மகள் ஆகிய இருவரின் போட்டியில் பாவம், கதவின் குடுமிதான் தேய்கிறது. அதற்கு வாய் இருந்தால் கேவிக் கேவி அழுமே, என்று பாடுகின்றார் புலவர். வீதியில் உள்ள ஏதோ ஒரு வீட்டில் கடந்திருந்தால் இந்தக் காட்சி புலவரின் கண்ணில்பட கியாயமில்லை. ஆனல் வீதியில் உள்ள பல வீடுகளில் இதே காட்சியைக் கண்டதால் நகைச்சுவைக்குரிய இந்தக் காட்சி யைப் புலவர் பாடலாக அமைத்து விட்டார். பாடல் வருமாறு:

‘தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்

தேயத் திரிந்த குடுமியவே - ஆயமலர் வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு’

-முத்தொள்ளாயிரம்: 11?

“தேயத் திரிந்த குடுமி’ என்ற தொடரில் அமைந்த நகைச்சுவையின் திறத்தை அளவிட முடியுமா?

நந்திக் கலம்பகம் என்று ஒர் அரிய இலக்கியம். அதிலி ருந்து ஒரு காட்சியைக் காண்போம். மணமான பெண்ணின் கணவன் பொருத்தமான காரணம் ஒன்று கூறி அவளைப் பிரிங் தான். அவன் வாக்களித்தவாறு இன்னும் அவளே வந்தடையவில்லை. அவ்வளவோடு கில்லாமல் வேறு ஒருத்தியோடு தொடர்பும் கொண் டிருக்கிருன். அத்தலைமகனின் நண்பன் இசையிலே வல்லவன். நந்திவர்மன் அரங்கினிலே தன் திறமை முழுவதையும் இசை பாடி வெளிப்படுத்திக் கொண் டிருந்தான். அரங்கில் கூடியிருந்தோர் அனைவரையும் தன் வயப்படுத்திக் கொண்டிருந்த அந்தப் பாணல்ை இந்தப் பெண்ணையும் அவளுடைய தாயையும், ஈர்க்க முடியவில்லை.