பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*64 நெஞ்சின் கினைவுகள்

அவர்கள் இசையை வெறுக்கவில்லை; இசையில் வல்ல அப்பான&னத்தான் வெறுத்தார்கள். காரணம் தலைவன் வேறொருத்தியின் தொடர்புக்கு இவன்தான் காரணம் என்று ஐயுற்றார்கள். அதல்ை, தாய் பேய் அலறுகின்றது என்றாள். மகளோ நாய் ஊளையிடுகின்றது’ என்றே சற்றும் தயங்காமல் கூறிள்ை. யார் நகைக்கத் தக்கவர்கள் என்பதைப் படிப்போரின் தீர்வுக்கு விட்டு விடுகின்றார் ஆசிரியர். பெண்ணின் தோழி பாணனை நோக்கிக் கூறுவ தாக அமைந்துள்ளது பாடல்.

பேணி இசைவளர்க்கும் நந்திபெம்மான் பேரரங்கில் ஏனெலி கென்னல் இரவு எழலும் - பாண! கேள் பேய் என்றாள் அன்னதான்; பேதைஎன் தங்கையும் நாய் என்றாள்! நீ என்றேன் நான்’

என்பது அப்பாடல்.

அடுத்தபடியாகக் கம்பனின் இராமாவதாரத்திலிருந்து ஒரு காட்சியைக் காண்போம். ஓர் அழகான கங்கை. எத்தகையவள்? வீணையின் இசைக்கும் புல்லாங்குழலின் இசைக்கும் கூட இனிமையை அளிக்கின்ற அளவிற்குக் கொஞ்சுமொழி பேசும் தன்மை வாய்ந்தவள். முருக்கமலர் போன்ற சிவந்த வாயினையுடையவள். கருங்குவளே மலர் போட்டு வைக்கப்பட்ட குளிர்ந்த கள்ளினையுடைய சாடியில், தன்னுடைய கண்ணின் கிழலேப் பார்த்து அதனே வண்டென்று மயக்கத்தில் கினைத்து ஒட்டுகின் ருளாம். அது வண்டாக இருந்தால் ஒடியிருக்கும் அதுதான் அவள் கண்ணின் கிழலாயிற்றே. தொடர்ந்து விரட்டிக் கொண்டே இருக்கின்றாள். தான் செய்யும் செயலின்கண் உள்ள அறியாமை அவளுக்குத் தெரியவில்லை. மற்றவர் கள் பார்த்துச் சிரிப்பார்களே என்ற சிந்தனே கூட இல்லை.