பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்தில் சில நகைச்சுவைக் காட்சிகள் 65。

எனவேதான் அவள் மயக்கத்தில் இருப்பதாக ஆசிரியர் கூறுகின்றார். இனி, புலவரின் பாடலை நோக்குவோம்.

“ யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன. இவையாம்

என்னக் கேட்கு மென் மழலைச் சொல்லோர் கிஞ்சுகம் கிடந்தவாயாள் தாள்கருங் குவளை தோய்ந்த தண்கறைச் சாடியுள்தன் வாள்கணின் கிழலைக் கண்டாள் வண்டென ஓச்சு கின்றாள்’

இப்பாடல் கம்பராமாயணம் பாலகாண்டம், உண்டாட்டுப் படலத்தில் வந்துள்ளது.

காளமேகப் புலவரின் பாடல்களைக் கேட்டறியாத வர்கள் தமிழ்நாட்டில் குறைவு. அவர் ஒருமுறை கடற். கரைப் பட்டினமாகிய நாகைப்பட்டினத்திற்குச் சென்றார். அவ்வூரில் காத்தான் சத்திரத்தில் உணவு உண்ணச் சென்றார். யாது காரணத்தாலோ சற்றுக் கால தாமத மாகி விட்டது. பசி வந்திடப் பத்தும் பறந்து போகு மல்லவா? பாடி விட்டார் ஒரு பாடல். அது கினைவை விட்டு நீங்காத இடத்தைப் படிப்பவர்கள் உள்ளத்தில் பிடித்துக் கொண்டது. காத்தானுடைய சத்திரத்தில் சூரியன் அத்தமிக்கும்போதுதான் அரிசி வருமாம். அதனே நன்கு குற்றி உலையில் இடுவதற்குள் ஊரே அடங்கி விடுமாம். ஒரகப்பைச் சோறு இலையிலிட வெள்ளி எழுந்துவிடும் என்கிறார் புலவர். அவருடைய நகைச்சுவை யுணர்வைப் போற்ற முடிகிறது. வேறொருவராக இருக் தால் முணகிக் கொண்டுதான் இருப்பார். ஆல்ை காள மேகம் தன்னுடைய பசி மயக்கத்தில் கூடப் பாடல் இயற்றும் ஆற்றல் பெற்றவராக விளங்கினர்.