பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*む6 நெஞ்சின் கினைவுகள்

“கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குற்றி உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும்’

என்பது பாடல்.

இருபதாம் நூற்றாண்டின் திரைவானில் கலைவளர்த்த கலைவாணரின் நகைச்சுவைக்கு அளவே இல்லை. நல்லதம்பி’ படத்தில் தன்னை நாகரிகக் கோமாளி என்றே கூறிக் கொண்டார். தன் மனைவியிடம் வீட்டுவேலை செஞ்ச பொம்மனுட்டிய பாரு; மேட்ைடு நாகரிகங்கொண்ட மேனியப் பாரு’ என்று வேறுபடுத்திக் காட்டி

“அவ காட்டுக்குப் போவா களையெடுப்பா காரியம் பாப்பா கஞ்சி குடிப்பா

இவ காருல போவா ஊரச்சுத்துவா

கண்ணுடி பாப்பா காப்பி குடிப்பா’

என்று பாடி, தமிழகத்தில் பிற பண்பாட்டுக் கூறுபாடுகள் தலே காட்டும் திறத்தை நகைச்சுவையோடு எடுத்துக் காட்டிப் புலவர் உள்ளத்தைத் தொட்டவர் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள். o

பாட்டுக்கு ஒரு கோட்டையென்றால் அது பட்டுக் கோட்டைதான் என்று கவிஞர் வாலி, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். அந்தக் கவிஞர் காட்டு வைத்தியர் காட்டுமூலிகையின் ஆற்றலை நகைச்சுவையோடு வெளிப்படுத்துகின்றார்.

“பொறுக்காத பல்லு வலிக்குச் சுருக்கத்திலே மருந்திருக்கு

போக்கி கிட்டே வாய குடுத்து பாக்கச் சொல்லுங்க!