பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்தில் சில நகைச்சுவைக் காட்சிகள்

கறுக்காத நரைமுடியும் வெளுக்காம இருக்கணும்னு காக்காய உயிரோட முளுங்கச் சொல்லுங்க! அண்டங் காக்காய உயிரோட முளுங்கச் சொல்லுங்க!

என்று பாடுகிரு.ர். வலியைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் வேறு வகையில் எண்ணத்தைத் திருப்பினல் நோயின் கடுமை தெரியாது என்பதைத்தான் இப்பாடல்

நகைச்சுவையோடு தருகின்றது.

நகைச்சுவை அறிவுடன் கூடியதாக இருத்தல் வேண்டும். உடலைக் கண்டபடி வளைத்து நெளித்துச் சிரிப்பை வரவழைத்தால் அது கிற்காது. பிறர் மனத்தைப் புண்படுத்தியும் நகைச்சுவையினை வளர்த்தல் கூடாது. நகையுள்ளும் இன்னது இகழ்ச்சி என்பதனே மறத்தல் கூடாது. சிரிக்கும்போழ்து பல நரம்புகள் வலிமை அடைவதால்தான் *சிரிப்பு ஒரு சிறந்த மருந்து’ என்கின்றனர். உலகம் சிரிக்கிறது; “ஊர் சிரிக்கிறது’ போன்றவற்றிற்கெல்லாம் வகை வகையான விளக்கங்கள் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிருேம். பிறரைச் சிரிக்க வைக்க முயல்வோம். பிறர் சிரிக்கும்படி நடவாமல்

இருப்போம்.