பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க கால மன்னரும் மக்களும் 69

விளைவிக்கும் பொழுது, அங்கிலத்தில் எழுந்துளள பயிர்களே விலங்குகளும் பூச்சிகளும் புழுக்களும் பறவைகளும் அழிக்க முற்படுவது இயல்பு. முக்கியமாகக் கொடிய விலங்குகளிட மிருந்து விளைவிக்கப்பட்ட பயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். எனவே உடல் திண்மையும் உள உரமும் வாய்ங் தோர் தேவைப்பட்டனர். இவர்கள் தொடக்கத்தில் மக்கள் உழுது வித்தி விளைவு செய்யும் பயிர்களே விலங் குகள் தொல்லையினின்றும் காத்தனர். எனவே இவர்கள் “காவலர்கள்’ எனப்பட்டனர். இவர்களுடைய இவ்வரும் பெருங் தொண்டிற்கு மக்கள் தாம் விளைவித்த கிலத்தி லிருந்து வந்த வருவாயில் ஒரு பங்கினை நன்றிக் கடகைக் காணிக்கையாகத் தந்தனர். நாளடைவில் இக்காவலர்கள் நாட்டின் காவலர்கள் ஆயினர். அது பரம்பரை பரம்பரை யாகவும் தொடர்ந்தது. அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி, விளைவில் ஆறில் ஒரு பகுதி என்றும் ஆனது. இவ் வாறு தொடக்கக் காலத்தில் மன்னராட்சி முறை தொடங் கியது.

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் நெல்லையும் உயி ராகக் கருதவில்லை; நீரையும் உயிராகக் கருதவில்லை. மன்னனையே உயிராகக் கருதினர்கள் என்பது அக்கால மக்கள் வாழ்வினே அருமையாகப் படம்பிடித்துக் காட்டும் புறநானூற்றால் தெளிவாகின்றது:

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

-புறநானூறு: 186: 1-3.

இதல்ை சங்க காலத்தில் மக்களுக்கு மன்னன் உயிராக விளங்கிய பெற்றி துலக்கமுறுகின்றது. இங்கிலே சிலப்பதி

கார காலத்தில் நீடித்தமை,

5