பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நெஞ்சின் நினைவுகள்

‘ஏழ்பிறப் படியோம் வாழ்கநின் கொற்றம்’

-சிலம்பு; காட்சிக்காதை: 56.

என்று குன்றக் குறவர்கள் செங்குட்டுவனிடம் கூறுவத லுைம், இடைக்காலத்திலும் நிலவினமை,

‘திருவுடை மன்னரைக் காணில்

திருமாலைக் கண்டேனே என்னும்

என்ற திருமங்கையாழ்வார் பாசுரத் தொடராலும் விளக்க முறக் காணலாம்.

இவ்வாறு மக்களுக்கு உயிராக விளங்கி ஆட்சி செலுத் தியதல்ை மன்னன் ஆட்சியை கிழல்’ என்ற சொல்லால் குறிப்பிட்டனர். மன்னனுடைய கொற்றக் குடை, வெயில் மறைப்பதற்கல்லாமல் மக்களுக்கு அளி செய்வதற்கு, அருள் செய்வதற்கு என்று கூறப்பட்டது. தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஒருமுறை வஞ் சினம் செய்யும்போது, ‘என் குடிமக்கள் என்குடை கிழல் சரிவர அமையவில்லை யென்றால் வேறு தங்கு மிடமின்றி அலமருக’ என்று கூறினன்.

“என்கிழல் வாழ்நர் செல்நிழல் காணுது

கொடியன்எம் இறையெனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலேன் ஆகுக’

-புறநானூறு; 2: 10-13.

என்னும் புறநானூற்றுப் பகுதி இவ்வுண்மையினை உணர்த் தும். அரசனின் தலையாய கடமை அறத்தின் வழியிலே கின்று கோலோச்சுவதே என்று கொள்ளப்பட்டது . யானை, குதிரை, தேர், படை மறவர் என காற்படை யாலும் ஒர் அரசனின் படைமாட்சி அமைந்தாலுங்கூட