பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க கால மன்னரும் மக்களும் 71

அறநெறியிற் செல்லுதலே அரசின் முறைமை என்று பேணப்பட்டது.

“கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய பரிமாவும்

நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும் நான்குடன் மாண்ட தாயினும், மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்,’

-புறநானூறு; 55: ?-10.

மன்னன் அரசியலில் அறங்கூறு அவையம் கண்டு, தமக்குள் மாறுபாடு கொண்டு வழக்கு மன்றத்திற்கு வந்து விட்ட இருவர்க்கும் அறகிலே திரியாமல் அன்போடும் திறமையோடும் கடுகிலேமை சான்ற தீர்ப்புக் கூறும் தக்க சான்றாேர்களைத் தீர்ப்புக் கூறும் நடுவர்களாக அமைத்து நீதி கிலேக்கச் செய்வதனைத் தலையாய கடமையாகக் கருதி ன்ை என்பது போதரும்.

“அறநிலை திரியா அன்பின் அவையத்துத்

திறனில் ஒருவனை நாட்டி மெலிகோல் செய்தே குைக’

-புறநானூறு; 71: ?-9.

என்னும் மன்னைெருவனின் வஞ்சினப் பகுதி, திேயில் காட்டங்கொண்ட நேர்மையான நெஞ்சத்தினைப் புலப் படுத்தும்.

விளைநிலங்களே பெருகிய நாடு தமிழ் நாடாதலின் மன்னன் மக்கள் உழுதொழில் உவப்புடன் செய்து வாழ் வதற்கு உறுதுணையாக அமைய வேண்டும் என்று கருதப் பட்டது. மழை மிகுந்தாலும் குறைந்தாலும் இயற்கை யல்லன செயற்கையில் தோன்றிலுைம் மன்னர்களை மக்கள் பழிப்பார்கள் என்ற சேரன் செங்குட்டுவனின் வாய்மொழி பும் இக்கூற்றை மெய்ப்பிக்கின் மது,