பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நெஞ்சின் கினைவுகள்

“மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கு நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில்லென’

-சிலம்பு; காட்சிக்காதை: 100-104.

இதனையே புறநானூற்றுப் புலவர் வெள்ளேக்குடி நாகனர்,

மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை யல்லன செயற்கையிற் ருேன்றினும் காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்

-புறநானூறு; 85: 37-39. என்றார்.

எனவே காடு கொன்று நாடாக்கிய காவலர், நன்செய் செழித்து வளர மழை நீரைத் தடுத்துத் தேக்கிப் பயி ருக்கு வேண்டும்பொழுது பயன்படுத்திக் கொள்ள உதவ வேண்டும். கரிகாற்பெருவளத்தான் மலேத்தலேய கடற் காவிரிக்குச் சிராப்பள்ளிக்கு அருகே காவிரியாற்றின் குறுக்கே கல்லணை கட்டி நீரைத் தேக்கி, இருகரை நிலங் களும் வளம் பெற்று விளைவு மிகுதியாக நீர்நிலைகளைப் பெருக்கிய திறம் இன்றும் சிறப்பாகப் பேசப்படுகின்றது.

“நீர் எங்கெங்கே சற்றுப் பள்ளமாக அமைந்திருக் கிறதோ அங்கங்கே ர்ே கிலேகள் அமையும்படி கரைகள் கோலித் தளை செய்த-நீரைத் தடைசெய்த மன்னர்களே இந் நிலவுலகத்தில் தம் பெயரை கிலே நிறுத் திக் கொண்டன ராவர்; அவ்வாறு நீர் கிலைகளுக்குத் தளை செய்யாதவர் இவ் வுலகில் தம் பெயரையும் புகழையும் தளே செய்யாதவரே யாவர்” என்று புறநானூற்றுப் பாடலடிகள் பொருள்