பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க கால மன்னரும் மக்களும் 73

பொருத்தமுற நீர் நிலைகளின், அணைகளின் அவசியத்தினே அன்றே பேசியுள்ளன.

“நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோ ரம்ம இவண்தட் டோரே தள்ளா தோர்.இவண் தள்ளா தோரே’

-புறநானூறு, 18: 28-30.

சங்க காலத்தில் மன்னர் கல்வி வளர்ச்சியில் கருத்துச் செலுத்தினர். ஒரு குடும்பத்தில் பலர் பிறந்திருப்பினும் அவர்களில் மூத்தவன் அறிவற்றயிைருப்பின் அவனுக்கு முதன்மை தராது, அக்குடும்பத்துள் கற்றவனுக்கே அரசன் முதலிடம் தந்து சிறப்பிப்பான் என்று பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புகன்றுள்ளான். எனவே எப்பாடுபட்டாயினும் சற்றுத் தேற வேண்டும் என்பது அவன் வற்புறுத்தலாகும்.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலாற் றயுமனந் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்ன தவருள் அறிவுடையோன் ஆறு அரசுஞ் செல்லும்’

-புறநானூறு; 188 : 1-7. மன்னன் தன் ஆட்சியைச் சிறப்பாகச் செய்வதற்கு வரிகள் வாங்க வேண்டும். வரிப்பொருளும், சுங்கப் பொரு ளும், பகைவர் போரில் திறையாகத் தந்த கப்பப் பொருளும் மன்னனின் வருவாய் வழிகளாகும். குடிமக்களிடம் மன்னன் எவ்வாறு வரி வாங்கவேண்டும் என்பதற்குப் புறநானூற்றில் பிசிராங்தையர் பாடியுள்ள பாடலொன்று நல்ல சான் ருக அமைந்துள்ளது.