பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நெஞ்சின் நினைவுகள்

“ஒரு மா அளவுக்குக் குறைந்த நிலமாயினும் அங் கிலத்தில் விளைந்த நெல்லே அறுத்துக் கவளம் கவளமாக யானைக்கு ஊட்டினல் பல நாட்களுக்கு அது வரும்; யான யும் அதனைத் தின்று பல நாள் பசியடங்கி இன்புறும். அவ் வாறன்றி நூறு செய்யாயினும் தன் போக்கிலே யானே சென்று தின்னப் புகுந்தால், அது வாயால் உண்ட கெல் லினும் அதன் காலடிபட்டு அழிவெய்தியதே மிகுதியாகி விடும். இதேபோன்று, அறிவுடைய அரசன் அறநெறி யறிந்து குடிகளிடம் வரி வாங்கினல், கோடிக் கணக்கான செல்வம் பெற்று அவன் இன்புறுவதுடன், அவனது நாடும் செழிக்கும். அவ்வாறில்லாமல், அவன் அறியாமை உடையவகை, அவனுடைய மந்திரச் சுற்ற மும் அறங் கூருது அவன் போக்கையே வலியுறுத்தித் துணைநிற்பவ சாக, குடிகளே வற்புறுத்தி அறமற்ற வழியில் பெருங் தொகையினை வரிப்பணமாகப் பெற விரும்பில்ை, அதல்ை அவனுக்கும் அவன் காட்டுக்கும் ஒருங்கே கேடு வந்து சேரும்’ என்று பாண்டியன் அறிவுடை கம்பியிடம் பிசி ராங்தையார் கூறுகிரு.ர்.

‘காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே

மாநிறை வில்லதும் பன்னட் காகும் நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும் அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடு பெரிது நந்தும் மெல்லியன் கிழவ னுகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் யானை புக்க புலம்போலத் தானுன் உண்னன் உலகமுங் கெடுமே”

-புறநானூறு; 184.