பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க கால மன்னரும் மககளும் 75

அடுத்து, சுங்க வரியால் மன்னனின் கருவூலம் பெரு கிற்று. ‘கு திரைகள் தமது ஒய்வு ஒழிச்சலற்ற ஒட்டத் கால் எந்நேரமும் கதிரவனது தேரைச் செலுத்திக் கொண் டிருப்பது போல, சுங்கக் காவலரும் தமது ஓய்வில்லாத சங்கத் தொகுப்பால் எந்த நாளிலும் கரிகாலனது ஆட்சித் தேரைச் செலுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று பட்டி னப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனுர் மொழி கின்றார்:

“நெடுநுகத்துப் பகல்போல

நல்லிறைவன் பொருள் காக்கும் தொல்லிசைத் தொழின்மாக்கள் காய்சினத்த கதிர்ச் செல்வன் தேர்பூண்ட மாஅபோல வைகல்தொறும் அசைவின்றி உல்கு செய’

-பட்டினப்பால; 120.125

மேலும், சாத்தொடு வழங்கும் உல்குடைப் பெரு வழி’ என்று வரும் பெரும்பானற்றுப்படைத் தொடர் (80, 81) உள்நாட்டு வணிகர் செலுத்திய சுங்க வரியை உணர்த்தும்.

‘வாரிக் கொள்ளா வரைமருள் வேழம்’

-மலைபடுகடாம்; 573.

எனும் மலைபடுகடாம் தொடருக்கு உச்சிமேற் புலவர் கொள் கச்சினர்க்கினியர்,

“பகைவர் திறைதந்த யானைகளை

என்று உரை எழுதியிருப்பதின்று பகைவரால் மன்னர் பெறும் வளம், சுட்டப்படுகின்றது.