பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க கால மன்னரும் மக்களும் 77

பட்டினப்பாலை பாடியதற்காகக் கடியலூர் உருத்திரங் கண்ணருைக்குச் சோழன் கரிகாற்பெருவளத்தான் பதினறு நூருயிரம் பொன் பரிசாக அளித்துள்ளான். பிறிதோ ரரசன் தன் அரசிருக்கையையே புலவருக்குத் தந்து விட்டான். குன்றா என்னும் மலையேறி அங்கிருந்து கண்ணிற் கண்ட காட்டையெல்லாம் கபிலருக்குக் கொடை தந்துவிட்ட மன்னன் பதிற்றுப்பத்திலே பேசப்படுகின்றான். தம் புதல்வன் குட்டுவன் சேரலேயே புலவர்க்குக் கொடை யாகக் கொடுத்து கின்ற மன்னனையும் பதிற்றுப்பத்தில் நாம் காண்கிருேம்.

இனி, இத்தகு புகழ்மிகு மன்னராற் புரக்கப்பட்ட மக்களைப் பற்றிக் காண்போம்.

சங்க காலத் தமிழர் வாழ்வு வளம் மிகுந்ததாகவும் புகழ் கொண்டதாகவும் துலங்கியது. “அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை’ என்று திருவள்ளுவர் குறிப் பிடுவது போன்று இல்வாழ்க்கை நெறி கின்று, விருந்தோம்பி வேளாண்மை செய்த வாழ்ந்தனர். இத்தகைய இனிதான இல்வாழ்வு இடையருது நடைபெற வேண்டுமானல் - ஆணும் பெண்ணுமாக ஒன்று சேர்ந்து காதலின்பத்தில் திளைத்துக் கற்பு நெறிப்படும் அகவாழ்வு செம்மையுறத் துலங்க வேண்டுமானல் அதற்கு முட்டுப்பாடற்ற பொருள் தேவை. பொருள் செய்வதற்கு அயராத உழைப்புத் தேவை. எனவே, ஆடவர் தொழில் முயற்சியையும் அவர்களையே அண்டி வாழ்ந்த மகளிர் அவர்களே உயிராகவும் கொண்டனர்.

“வினையே ஆடவர்க் குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க் காடவர் உயிர்’

-குறுந்தொகை; 136; 1 - 3