பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நெஞ்சின் நினைவுகள்

எனவே, இல்லோர் வாழ்க்கை இளிவென்று கருதி, இல்லோர்க்கு இயைவது சரத்தல் மேலும் இளிவென்று கருதி, பசி என்று வந்தவர்க்குப் புசி என்று கருதற்க மைந்த பொருளை ஈட்ட முனைந்தனர். செய்க பொருளே’ என்னும் திருவள்ளுவர் ஆணை பொருள் தேடலின் இன்றியமையாமையினை விளக்கும்.

சங்க காலத்தே மலேயும் மலேயைச் சேர்ந்த பகுதியாம் குறிஞ்சியில் வாழ்ந்த மக்கள் தேனெடுப்பது, தினே விதைப்பது, கிழங்ககழ்வது, மூங்கில் நெல் கொள்வது முதலான தொழில்களோடு வேட்டையாடுதலேயும் மேற்கொண்டிருந்தனர். காடும் காட்டைச் சார்ந்த முல்லை கிலத்தில் வாழ்ந்தோர் ஆகிரை மேய்ப்பது, பால் கடைந்து தயிரும் நெய்யும் எடுப்பது, வரகு, சாமை முதலியன விளைவிப்பதான தொழில்களை மேற்கொண்டனர். வயலும் வயலைச் சார்ந்த மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவு செய்வது, நாகரிக மிகுதியால் நகரமைப்பது, ஆட்சி மு ைம கண்டு அரசோச்சுவது முதலான தொழில்களே ஆற்றினர். கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்த நெய்தல் நில மக்கள் முத்துக் குளிப்பது, மீன் பிடிப்பது, உப்பு விளைவிப்பது, கடல் கடந்து கலத்திற் சென்று வாணிகம் செய்வது முதலான தொழில்களை ஆற்றினர். வற்றிய பாலே கிலத்தில் வாழ்ந்த மறவர்கள் வேட்டையாடுதல், வழிப் போவோரைத் தாக்கிக் கொல்லுதல் முதலான கொடுஞ் செயல்களில் ஈடுபட்டிருந்தனர்.

இங்கில மக்கள் அனைவர்க்கும் இடையே அன்பு நேயம் துலங்கியது. யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பரந்துபட்ட உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வு கொழித்திருந்தது. பல நாள்கள் தம்மோடு நெருங்கிப் பழகிய தோழமையுடையோர் நஞ்சையே உண்பதற்குத்