பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க கால மன்னரும் மக்களும் 79

தந்தாலும் அங்கஞ்சையே மருமல் உண்டு கிற்கும் நட்புரிமை நிலவியது.

‘முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்’.

-நற்றிணை 855: 6 - 7

மேலும், பகுத்துண்டு பல்லுயிரோம்புதல் கொள்கை சங்ககாலச் சமுதாய மக்களின் உயிர்காடியான கொள்கை யாக இருந்தது. பெருஞ்சித்திரனர் என்னும் சங்ககாலப் புலவர் வறுமை வாய்ப்பட்டார் அவருடைய தாய் சரிவர உணவின்மையாலும் மூப்பு மிகுதியாலும் அறக்கடவுளேயே அடிக்கடி நொந்து கொள்ளும் நிலைக்கு ஆளாள்ை. அவர் மனைவியோவெனில் தான் பெற்ற குழவிக்குப் பால் தர இயலாமல் அம்புலி காட்டித் தெருட்டியும் குழவி அடம் பிடித்து அழுதது. இவ்வுளம் உருக்கும் அவலக் காட்சி யைக் கண்ட புலவர், கொடைநெஞ்சு கோடாக் குமண வள்ளலை அண்டினர். தம் மிடியை எடுத்துரைத்தார். பெரும்பரிசில் பெற்று வீடு திரும்பினர். அப்பொருளே நெடுநாள் மிடியின்றி வாழச் சேமித்து வைத்துக் கொள் ளாமல், கடன் கொடுத்தவர்க்குக் கொடுத்த அளவே திருப்பித் தராமல், எல்லோர்க்கும் எடுத்து வழங்குக என்று தம் மனைவியைப் பார்த்துப் பெருமித உள்ளத்தோடு: புலவர் பெருஞ்சித்திரனர் பாடும் பாடலில் புலவரின் பெருமனம் புலகிைன்றது. ‘எல்லாரும் வாழ்வோம்; நன்றாக வாழ்வோம்’ என்ற சமுதாய ஒப்புரவு எண்ணம் பளிச்சிடுகின்றது. இருவேறு மனநிலைகளில் ஒரு மனத்தி லிருந்து எழுந்த உணர்வுகளின் படப்பிடிப்பாக அமைந்: துள்ள பாடல்களேக் காண்க:

‘ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்