பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க கால மன்னரும் மக்களும் 81.

  • அவிர்துகில் புரையும் அவ்வெள் ளருவி ‘

-குறிஞ்சிப்பாட்டு; 55.. முதலான தொடர்கள் அக்காலத்தே நெய்யப்பட்ட ஆடையின் நேர்த் தியை உணர்த்தும். பருத் தியிலிருந்து நுட்பமாக நூலே நெய்யும் பெண் அன்று பருத்திப் பெண்டு என்றே அழைக்கப்பட்டாள்.

  • பருத்திப் பெண்டின் பனுவ லன்ன ’’

-புறநானூறு; 139.1 என்பது புறநானூற்றுத் தொடர். கணவனே யிழந்த கைம்பெண்கள் பஞ்சிலிருந்து நூல் நூற்கும் தொழிலில் ஈடுபட்டுத் தம் கவலையை மறந்தனர். மன ஆறுதலும், வாழ்க்கைக்கு உரிய ஊதியமும் ஒருங்கே இதல்ை அவர் களுக்கு கிடைத்தன.

“ஆளில் பெண்டிர் தாளின் செய்த

நுணங்கு நுண் பனுவல்’

—ss so mor; 353: 1-3. என்பது நற்றிணை.

ஆடைகளை அடுத்து அணிகள் சங்க காலத் தமிழர் தம் நாகரிகச் சிறப்பைப் புலப்படுத்துவனவாகும். உடம் பின் பல்வேறு பகுதிகளிலும் பூணப்பெற்ற அணிகலன் கள் தமிழர்தம் நுண்வினைச் சிறப்பினே நுவலும்.

ஒரு நாட்டின் பெருஞ்சிறப்பிற்குச் சான்றாய்த் துலங் குவது அந்நாட்டின் வாணிக வளனேயாகும். பத்துப் பாட்டுள் ஒன்றான பட்டினப்பாலையில் சங்க காலத் தமிழி ரின் வணிகச் சிறப்பு வகையுறப் புனைந்து பேசப்பட்டுள் ளது. பிறர் பொருளே மிகுதியாகக் கொள்ளாமலும், தம் முடைய பண்டங்களைக் குறைத்துக் கொடாமலும் கடுவு கிலை சார்ந்த நன்னெஞ்சத்தோடும் உண்மை யுணர்வோடும்