பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க கால மன்னரும் மக்களும் S 3

னேக் கொண்டு வந்து, அதற்கீடாக மிளகைப் பெற்றுச் சென்ற யவன நாட்டாரின் செயல், தமிழகத்தின் வாணிக வளனே வகையுறப் புலப்படுத்தும். தமிழரசர் அரண்மனை வாயிற் காப்பாளராய் யவனர் விளங்கிய திறமும், அவர்கள் கொணர்ந்த பாவை விளக்கும் நோக்கத்தக்கன.

அடுத்து, கலைகளின் மேம்பாடே ஒரு நாட்டின் பண் பாட்டுச் சிறப்பினைப் பறையறையும் என்பர். சங்க காலத் தமிழகத்தில் எல்லாக் கலைகளும் ஏற்றம் பெற்றிருந்தன. புறநானுாற்றில்,

“..................... விசும்பின் வலவன் ஏவா வான வூர்தி’

-புறநானூறு; 37; ?-8.

என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது. இதே போன்றே இன்று நாம் காணும் ‘தெர்மாஸ் பிளாஸ்க் போன்ற அமைப்பு என்று கருதத் தகும் சேமச் செப்பு’ என்னும் கருவி குறுந்தொகைப் பாடலொன்றில் குறிப்பிடப்பட் டுள்ளது. வான சாத்திரக் கருத்துகளும், சோதிடக் குறிப் களும் சங்க இலக்கியத்தில் நிறையவுண்டு.

இசைக்கலையின் சிறப்பு அகநானூற்றுப் பாடலொன் முல் அழகுறப் புலகிைன்றது. மலைவாழ் மங்கையொருத்தி யெழுப்பிய இசையைக் கேட்டுத் தினைக்கதிர்களை உண்ண வந்த யானே முன்னடியும் எடுத்துவைக்க முடியாமல் பின்னடியும் எடுத்து வைக்காமல் கொடிச்சியின் பாலை யாழிசையில் மயங்கி அப்படியே உறங்கி விட்டதாகக் குறிப்பு வந்துள்ளது:

  • ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி

பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது