பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நெஞ்சின் நினைவுகள்

படாஅப் பைங்கண் பாடுபெற் ருெய்யென மறம்புகல் மழகளிறு உறங்கும் ‘

-அகநானூறு; 103: 5-9.

பாகர்களுக்கும் அவர்தம் குத்துக்கோல்களுக்கும் அடங்காத மதம் பிடித்த யானையினையும் இனிய யாழிசை வயப்படுத்தி விடுகின்றது:

“ காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல்

யாழ்வரைத் தங்கி யாங்கு’

-கலித்தொகை; 1: 36-37.

முல்லை நிலத்தில் குழலூதும் கோவலர்கள் ஆகிரை களைத் தம் குழலிசை கொண்டே தம்முடன் அழைத்துச் செல்வதனை முல்லைக்கலி மொழியும்:

‘ஒழுகிய கொன்றைக் தீங்குழல் முரற்சியர்

வழுஉச் சொற்கோவலர் தத்தம் இனங்ரை பொழுதொடு தோன்றிய கார்நனை வியன்புலத்தார்’

-முல்லைக்கலி; 106: 3.5.

மக்கள் பொருளைக் கொள்ளே கொள்ள வந்த கள் வரும் பாலை இசை கேட்டுத் தம் நெஞ்சைக் கொள்ளே கொடுத்து வாளா கிற்கின்றனர்.

“ ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை “ -- -பொருங்ராற்றுப்படை; 31-33.

அடுத்து நாட்டியக் கலையும் நாடகக் கலையும் உயர் கிலையில் விளங்கியமை பல சான்றுகளால் போதரும்.

இவ்வாறு பீடுசான்ற பெருவாழ்வு வாழ்ந்த தமிழர்

குறிஞ்சியில் குமரனேயும், முல்லையில் திருமாலேயும், மருதத் தில் இந்திரனேயும், நெய்தலில் வருணனையும், பாலையில்