பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க கால மன்னரும் மக்களும் ć5

கொற்றவையையும் வணங்கினர். பயன் கருதி வணங்கும் வழிபாட்டை மறுத்து, அருளும் அன்பும் அறனும் வேண்டி கின்ற சங்ககால மக்களின் வழிபாட்டுத் திறம்,

“ .........யாஅம் இரப்பவை

பொருளும் பொன்னும் போகமும் அல்ல, கின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே ‘

-பரிபாடல்; 5: 78.81.

என்னும் பரிபாடற் பகுதியால் விளங்குகின்றது.

இவ்வாருகச் சங்க கால மன்னர்கள் மறம் பொருங் திய மானவீரம் உடையவரே யாயினும் அறநெறி போற் றிக் குடிமக்களுக்கெல்லாம் உயிரென விளங்கி ஒளிர்ந்த திறமும், அக்கால மக்களும் தத்தம் வினையே உயிரெனக் கொண்டு தொழிலாற்றிய பான்மையும், மகளிர், கணவரே தம் கண்ணினும் மேலானவர், உயிரினும் மேலானவர் என்று கருதிக் காதல் நெஞ்சம் பொங்க வாழ்ந்த கருணைத் திறமும், “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்து பட்ட பண்பாட்டில் எல்லோரும் வாழ்வோம்; நன்றாக வாழ்வோம்’ என்ற பொதுவுடைமை யுணர்வில் மக்கள் வாழ்ந்த வகையும் ஒருவாறு காணப்பட்டன.