பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகியல் போற்றிய அருந்தமிழர்

உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் மனிதனின் இன்றியமையாத் தேவைகளாகும். மனிதன் காட்டில் விலங்கோடு விலங்காய் வாழ்ந்து, கிடைத்ததை உண்டு, இலை தழைகளை உடுத்து; காட்டிலும் மேட்டிலும் குகையிலும் படுத்துறங்கி வாழ்ந்த பழங் காலத்திலிருந்து படிப்படியாக முன்னேறினன். அவன் உழவுத்தொழிலைக் கற்றுக் கொண்ட காலம் நாகரிக வாழ்விற்கு அவன் அடியெடுத்து வைத்த காலம் என்பர். உழவினையடுத்து ஆடை நெய்யும் நெசவுத் தொழிலினைக் கற்றுக்கொண்டான். நாகரிக வளர்ச்சி ஏற்பட்டது. பின்னர் மண்ணிற் கிடைத்த தங்கம் வெள்ளி கொண்டும், கடலிற் கிடைத்த பவளம், முத்து கொண்டும் அணிகலன் களே ஆக்கிக் கொண்டு, அவற்றை தன் அங்கங்களில் அணிந்து மகிழ்ந்தான். நாகரிகம் மேலும் உயர்ந்து விட்ட தாகக் கருதப்பட்டது. இவ்வாறு ஆடை அணிகலன்களே உருவாக்கி மனிதன் அவற்றை அணிந்து பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கிய காலம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் மிக மிகப் பழங்காலமாகும்.

இன்று தமிழிற் கிடைக்கும் நூல்களில் பழமையான நூல்கள் சங்க இலக்கியங்களாகும். அந்நூல்களிலேயே ஒப்பனேக் கலையின் மாட்சி உயர்வாக இடம் பெற்றிருக்கக்