பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகியல் போற்றிய அருந்தமிழர் 87

காணலாம். “அழகுப் பொருட்கள் என்றும் மாருத id?go#G 505th guudol Haol-uuopal’ (Athing of beauty is a joy for ever) என்பது கீட்ஸ் என்னும் பெருங்கவிஞரின் கூற்றாகும். பழந்தமிழர் அழகைத் தெய்வமாக ஆராதித் தனர். தெய்வத்தின் திருப்பெயரையே முருகன்’ என அமைத்துக் கொண்டனர். இயற்கை இனிதுறக் கொலு வீற்றிருக்கும் மலைகளில் அவனைக் கண்டனர்; குறிஞ்சிக் கிழவன்’ எனக் கொண்டனர். முருகு’ என்ற சொல்லிற்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற நான்கு பொருள்கள் உண்டு என்பர் தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள்.

ஆடை அணிகலன் ஆசைக்கு வாசமலர் அணிவது மகளிர் இனத்தின் மாருவேட்கை என்பர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஆண்களினும் பெண்கள் ஒப்பனைக் கலையை உயர்வாகப் போற்றி வளர்த்தனர். ‘ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்ற பழமொழி தமிழ்நாட்டுப் பழமொழி. பட்டு நூலாலும் பருத்தி நூலாலும் ஆடு, எலி முதலிய வற்றின் உரோமங்களாலும் பலவகைப்பட்ட ஆடைகள் கெய்யுங் தொழிலாளர் பண்டைத் தமிழ்நாட்டில் சிறந்து வாழ்ந்தார்கள் என்று சிலப்பதிகாரம் முதலிய செந்தமிழ் நூல்கள் செப்புகின்றன. ஹரப்பா, மொகஞ்சதாரோ முதலான புதையுண்ட நகரங்களைத் தோண்டிப் பார்த்த பொழுது பல வீடுகளில் தறிகள் அமைத்து நெசவுத் தொழிலில் மக்கள் ஈடுபட்டிருந்தனர் என்பது தெரிய வருகிறது. இந்நாளிலும் முகூர்த்த சேலையைக் கூறைச் சேலை என்று சொல்லும் வழக்குண்டு. கூறைநாட்டில் திருமண முகூர்த்தத்திற்கென நெய்யப்பட்டு நாடெங்கும் சென்று விற்பனையான சேலை இப்போது ‘கொர நாடு என மருவி வழங்கும் மாயூரத்தையடுத்த சிற்றுாரில் நெய்யப் பட்டது. கூறை நாடு’ என்பது கொரநாடு’ என மருவி