பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நெஞ்சின் நினைவுகள்

வழங்குகிறது. இந்தக் கூறையென்ற சொல்லையே சுந்தரமூர்த்தி நாயனர் தம் தேவாரத் திருப்பாட்டில் “உடை” என்ற பொருளில் கையாண்டிருக்கக் காணலாம். * இம்மையே தரும் சோறும் கூறையும்

ஏத்தலாம் இடர் களையலாம் அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில் லையே ‘ என்று பாடியுள்ளார்.

ஒரு மொழியில் ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்கள் வழங்கில்ை அம்மொழி பேசும் மக்கள் அத்துறையில் மேம்பட்டு விளங்குகிறார்கள் என்பது பொருள். அம்முறையில் அறுவை, ஆடை, உடை, கலிங்கம், காமுகம், தூசு, துகில், துணி முதலான பல சொற்கள் ஆடையைக் குறிக்க வழங்கும். மேலும் தறியினின்றும் துணிக்கப் பட்டது துண்டு; அறுக்கப் பட்டது அறுவை; குறைக்கப்பட்டது கூறை என்று கூறலாம். அம்முறையிலேயே பெயர்களும் அமைக் துள்ளன.

பருத்தி நூலாலான ஆடை இழை தெரியாதவாறு மிகவும் நெருக்கமாகவும் கெய்யப்பட்டன.

நோக்கு நுழைகல்லா நுண்மைய பாலாவி யன்ன மேலாடை பாம்புரி யன்ன அறுவை காம்புசொலித் தன்ன அறுவை

முதலான இலக்கியத் தொடர்கள் இவ்வுண்மையினை உணர்த்தும். ஆடை நெய்வதற்கு வேண்டிய நூலைப் பெரும்பாலும் கைம்மை கோன்பை மேற்கொண்டிருந்த பெண்கள் நூற்றனர். ஆகவே, அவர்கள் பருத்திப்