பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகியல் போற்றிய அருந்தமிழர் 89

பெண்டிர் என அழைக்கப் பெற்றனர். கொட்டைக்கரை போடப்பட்ட உயர்ந்த பட்டாடைகள், பழுமரம் தேடிச் செல்லும் பறவை போல வள்ளலை நாடிச் சென்ற வறிய பாணர்கட்குப் பரிசிற் பொருள்களாக வழங்கப்பட்டன.

‘கொட்டக்கரைய பட்டுடை நல்கி ‘

பூவேலையுடன் கூடிய நிறமூட்டப்பட்ட ஆடைகளும் அக்காலத்தில் நெய்யப்பட்டன என்பதனே,

நீலக்கச்சை பூவா ராடை

என்ற தொடர் விளக்கி நிற்கிறது. மேலும் சிறுமியர் அணியும் ஆடை சிற்றாடை’ என்றும், போர் மறவர்கள் போர்க்களத்தில் ழுழந்தாள் வரையில் அணிந்து கொள்ளும் உடை வட்டுடை’ என்றும் வ ழ ங் க ப் ப ட் ட ன. “தழையுடை’ என்ற சிறப்புடையும் சங்க காலத்தில் வழக்கில் இருந்தது. அவ்வுடை இளந்தளிர்களிலுைம் மலர்களிலுைம் ஆனதாகும். அதனைப் பெண்கள் அழகுக் காகத் தம் ஆடையின் மீது அணிந்து கொள்வர். தழையுடை யானது, தலைமகல்ை தலைமகளுக்குத் தோழியின்வழி அன்பின் அடையாளமாக, கையுறையாக, காணிக்கையாகக் கொடுக்கப் பட்டது என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பகரும். சரிகை கலந்து நெய்யப்பட்ட பட்டாடை “பீதாம்பரம் எனப்பட்டது. அது ‘பொன்னடை எனத் தமிழில் வழங்கும். செங்கண் நெடியோனும் திருமால் கின்ற கோலத்தில் திருவேங்கடமலையில் பொலம் பூவா டையிற் பொலிந்து தோன்றுவதாகச் சிலப்பதிகாரத்தில் மாடல மறையோன் கூறுகிருன். எலி மயிர், ஆட்டு ரோமம் முதலியவற்றைக் கொண்டு அழகான கம்பளங்கள் நெய்யப்பட்டன. முப்பத்தாறு வகையான வெவ்வேறு வகைப்பட்ட ஆடைகள் அக்காலத்தே வழக்கில் இருந்த