பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நெஞ்சின் கினேவுகள்

தாக அறிய வருகிருேம். உடை தைக்கும் தொழிலாளி “துன்னகாரர்’ எனப்பட்டார். காருகர்’ என்ற பெயரும் அவருக்கு வழங்கப்பட்டதாகச் சிலப்பதிகாரம் கூறும்

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்

-சிலம்பு; 5: 16-17,

இனி அணிகலன்களைக் குறித்துக் காண்போம். மாடத் திற்குச் சித்திரம் அழகுக்கு அழகு சேர்ப்பது போல மங்கை யர் அழகிற்கு அழகு சேர்ப்பது அணிகலன்களாகும். நாக ரிகம் முதிர்ச்சியடைந்து விட்டதாகக் கருதப்படும் இக் காலத்திலுங் கூட மகளிர் நகையணியும் பழக்கம் முற்றிலும் நீங்கிவிடவில்லை. எனவே மிகப் பழங்காலத்தில் அணிகலன் கள் மிகப் பலவாக இருந்திருக்க வேண்டும். முற்காலத்தில் தலை முதல் கால் வரையில் அணங்குகள் மட்டும் இன்றி ஆடவரும் பல்வேறு அணிகலன்களை அணிந்தார்கள் என் பதனே அறியலாம். ‘இழை’ என்ற சொல், நகையைக் குறிக்கும். ஆராய்ந்தெடுக்கப்பட்ட அணிகலன்களை அணிந்த பெண்கள் ‘ஆயிழையார் எனப்பட்டனர். அவ் வாறு அனைத்து அணிகலன்களும் அணிந்து மாட்சிமை யெய்திய மங்கையர் முற்றிழையார்’ எனப்பட்டனர். “முற்றிழை மடகல்லீர்’ என்ற இலக்கியத் தொடரினையும் உன்னுக. அணிகளில் முக்கியமான அணி தாலி” யாகும். திருமணத்திற்கு அடையாளமாக மகளிர் கழுத்தில் துலங் கிய இவ்வணி ஈகையரிய இழையணி-அதாவது கொடுத் தற்கு இயலாத ஆபரணம்’ எனப்பட்டது. குழந்தை களுக்குச் சிறுவயதில் காத்தற்கடவுளாகிய திருமாலின் சங்கு, சக்கரம், வில், வாள், கதை ஆகிய ஐந்து படைக் கலன்களையும் சிறுவடிவத்தில் பொன்னில் செய்து கோத்துத் கழுத்தில் தொங்க விடுவார்கள். இவ்வாறு குழந்தைக்குக்