பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகியல் போற்றிய அருந்தமிழர் 91

காப்பாக-பாதுகாவலாக அணிவிக்கப்பெறும் ஆபரணத் திற்கு ஐம்படைத் தாலி என்று பெயர். முருகப்பெரு மானுக்குக் காவிரிப்பூம்பட்டினத்தில் எடுக்கப்பட்ட திரு விழாவினைக் காணும்பொருட்டு ஆடவரும் மகளிரும் குழுமியிருந்த காலையில், குழந்தைகள் அணிந்திருந்த ஐம் படைத் தாலியை அவர்கள் மணிவாயினின்றும் சிந்திய உமிழ்நீர் நனைத்தது என்று மணிமேகலையாசிரியர் சீத்தலைச் சாத்தனர் மாண்புறப் பாடியுள்ளார்:

செவ்வாய்க் குதலை மெய்பெரு மழலை சிந்துபு சின்னிர் ஐம்படை நனைப்ப.

-ഥങ്ങി; 8:187-188.

மேலும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண் டியன் நெடுஞ்செழியன் மிக்க இளவயதிலேயே போர்க் களஞ் சென்று பொருது வீரத்தில் மேம்பட்டு நின்றான் என்ற வியத்தகு செய்தியினை இடைக்குன்றுார் கிழார் என்னும் புலவர்,

தாலி களைந்தன்றும் இலனே

என்னும் புறநானூற்றுப் பாடலின் வழியே புலப்படுத்தி யுள்ளார்.

சிறுவர் “ஐம்படைத் தாலியோடு புலிப்பல் தாலி'யும் அணிந்திருந்தனர். பொற்கால் புதல்வர் என்னும் பட்டி னப்பாலைத் தொடர், சிறுவர் பொன்னலாய சதங்கை என்னும் காலணிகளை அணிந்திருந்தனர் என்பதனைக் காட்டும்.

வீரரும் வேந்தரும் வீரத்திற்கு அறிகுறியாகக் காலில் கழலும் தோளில் வாகுவலயம் என்னும் வளையலும் அணிந்து போருக்குப் புறப்படுவர். பகை யரசரை வென்ற மன்னர் தோல்வியுற்ற மன்னரது முடியிலுள்ள பொன்