பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ2 நெஞ்சின் நினைவுகள்

அனக் கொண்டு கழல் செய்து, தாம் அவரை வென்று அடிப்படுத்தியதற்கு அடையாளமாக அணிந்து கொள்வர். மேலும் அவர்கள் பொன்னலும் மணியாலும் இழைத்த விலையுயர்ந்த முடிக்கலன்களையும் தலைமாலைகளையும்கண்ணிகளையும் அணிந்தனர். போருக்குப் புறப்பட்டுச் செல்லுமுன் பொன்னலாகிய வெட்சி, வஞ்சி, நொச்சி, தும்பை, வாகை முதலான மலர்களின் வடிவில் அமைந்த அணிகலன்களே அடையாளப் பூமாலைகளாகச் சூடினர். போரில் வெற்றி பெற்ற வேந்தன் தன் படை மறவர்க் கும், தன் வீரத்தை விளங்கப் பாடிய புலவர்க்கும், பாணர் கட்கும் பொற்றாமரைப் பூவினைப் பரிசாக நல்கின்ை.

இனிப் பெண்கள் அணிந்த அணிகலன்கள் குறித்துக் காண்போம். அவர்கள் முடிமுதல் அடிவரையில் அதாவது தலே முதல் கால் வரையில் அணிகலன்களை அளவின்றி அணிந்திருந்தனர். ஆடகம், சாம்புகதம், கிளிச்சிறை, சாதி ரூபம் என்னும் நால்வகைப் பொன்னும் மரகதம், மாணிக் கம், நீலம், வைடுரியம், புட்பராகம் முதலான ஒன்பது வகை மணிகள்-நவரத்தினக் கற்கள்-அவர்களுக்குரிய அணிகலன்கள் சமைப்பதற்குப் பயன்பட்டன. முதலாவ தாக மகளிர் தலைக்கு அணிந்த அணிகலன்களைக் காண் போம்:

தலையணிகள்

சீதேவியார். வலம்புரி, தென்பல்லி, வடபல்லி என் னும் நகைகள் தலையில் அணியப்பட்டன. சீதேவியார் என்பது சூளாமணி என்றும் வழங்கும். இதற்கு இரத் தினச் சுட்டி, ஜடைப்பில்லை என்றும் பெயர்கள் வழங் கும். தென்பல்லி, வடபல்லி என்பவை, பல்லியின் உருவ மாகச் செய்யப்பட்ட ககைகளாகும். இவை தலையின் இடப் புறத்திலும் வலப்புறத்திலும் அணியப்பட்டன. தொய்