பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நெஞ்சின் நினைவுகள்

கடிப்பினை, வைரக் கடிப்பினை என்னும் இருவகையாகக்

கூறப்பட்டுள்ளது. பொன்ைேலை, மஞ்சிகை என்னும் இரு

புதிய காதணிகளைச் சிந்தாமணி இயம்புகின்றது. தோடு

என்னும் காதணி பொன்னல் செய்யப்பட்டது; சிங் தாமணி

காலத்தில் மருப்பாலும் கொம்பாலும் செய்யப்பட்டது

என அறிய வருகிருேம்.

“நாகம் மருப்பி னியன்ற தோடுங்

நலங்கொள் சுறவுக குழையும்

-சிந்தா; 3440:1.

தோளணிகள்

தோளில் அணியும் வளை தோள்வளை என்றும் தொடி என்றும் வழங்கப்பட்டது. மகளிரேயன்றி ஆடவரும் தோள்வளை அணிந்த செய்தி முன்னரே கூறப்பட்டது. இத்தோள்வளையும், மகர மீன்முகத்தை உமிழ்வது போல் செய்யப்பட்டிருந்தது என்பதற்கு,

“பஞ்சி யனைய வேய்மென்றாேட்

பகுவாது மகரங் கான்றிட்ட கஞ்சாக் கதிர்கொ டுணமுத்தம்’

-சிந்தா; 351: 1-3.

என்னும் சிந்தாமணி அடிகள் சான்று பகரும்.

கழுத்தணிகள்

பெண்கள் தம் கழுத்தில் பலவகையான அணிகலன் களை அணிந்தனர். சரடு அல்லது ஞாண், கயிறு போலப் பொன்னல் செய்யப்பட்டதாகும். பொன்னரிமாலை எனப் படுவது பொன்னலும் இரத்தினங்களாலும் செய்யப்பட்ட அணியாகும். முத்து, பவழங்களாலாய மாலைகளும் கழுத் தில் அணியப்பட்டன. அட்டிகை என்று இன்று வழங்கப்