பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகியல் போற்றிய அருந்தமிழர் 95

5

படும் அணி, அன்று இரத்தினம், வைரம், முத்து முதலியன பதிக்கப்பட்டு அணியப்பட்டு வந்தது.

மார்பணிகள்

மகளிர் மார்பிலணியும் அணி பூண் என்று சங்க காலத்தே சாற்றப்பட்டது. அஃது இலை வடிவத்தில்

அமைந்திருந்ததாகப் பின்வரும் சிந்தாமணித் தொடர்கள் காட்டும்:

“அன்னிலைப் பூணி ருைக் காவி’

-சிந்தா; 1274:3.

‘இலையா ரெரிமணிப்பூ ணேந்து முலையும்’

-சிந்தா: 732:1

“இதயவாசனை’ என்று ஆடவர் அணியும் ஒரு மார் பணியைப் பெருங்கதை,

“இலைப்பெரும் பூணும் இதயவா சனையும்’

-பெருங். 2: 19: 117,

என்று குறிப்பிட்டுள்ளது.

கையணிகள்

முன் கையில் தொடி, கடகம், வளை என்னும் அணி களே மகளிர் அணிந்தனர். கடகம்மணியாலயாது என்பது “பன்மணிக் கடகம்’ என்ற தொடராலும், இலை வடிவினது என்பது இலையார் கடகம்’ என்ற தொடராலும் சிந்தாமணி கொண்டு அறியலாம்.

பழந்தமிழ் நாட்டில் பெண்கள் சங்கு வளையல்களே அணிந்து வந்தனர். வெள்ளை நிறமுள்ள கடற்சங்குகளே அறுத்துச் செய்யப்பட்ட வளையல்களை அணிந்தனர்.