பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.96 நெஞ்சின் நினைவுகள்

“வாளரம் பொருத கோணேர் எல்வளை

அகன்தொடி செறித்த முன்கை’

-நற்றிணை; 77; 9-10.

சங்கு வளையல்களோடு பொன் வளையல்களே அணியும் வழக்கமும் அன்று இருந்தது.

“பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை

வலம்புரி வளை’

-நெடுகல்வாடை: 141-42.

தொடியை அணிந்ததனுல் மகளிர் பைங்தொடியர்’ எனப் பட்டனர். தொடியும், கடகமும் முன்கையில் அணியப் பெற்றன. வெள்ளியில்ை செய்த வளைகளையும், முத்தினை அழுத்திச் செய்த தொடியினையும் ஒருங்கே மகளிர் அணிக் திருந்தனர்.

‘நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச்

சூர்ப்புறு கோள்வளைச் செறித்த முன்கை’

- அகநானூறு; 142: 16-17.

“தளைநெகிழ் பிணிநிவந்த பாசடைத் தாமரை

முளைநிமிர்ந் தவைபோலும் முத்துக்கோ லவிர்தொடி’

-கலித்தொகை; 59: 1-3.

சிலப்பதிகாரக் காப்பியத்தில் மாதவி, வைரம் கட்டிய சூடகம், பொன்வளை, பரியகம், சங்குவளை, பவழவளே முதலிய அணிகலன்களை முன்கையில் ஒருங்கே அணிந்திருங் ததாகக் குறிப்பிடப் பெறுகிருள்:

‘மத்தக மயிரொடு வயிரங் கட்டிய

சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை