பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகியல் போற்றிய அருந்தமிழர் 97’

பரியகம் வாள்வளைப் பவளப் பல்வளை அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து’

-சிலம்பு; 6:91-94.

என்பது இளங்கோவடிகள் வாக்கு.

விரலணிகள்

வேதகால மக்கள் கை, கால் விரல்களில் மோதி ரங்கள் அணிந்திருந்தனர் என்பர். மீன் வாய் திறந்திருப்பது போன்ற வடிவுடைய முடக்கு மோதிரத்தின மகளிர் விரலில் அணிந்திருந்ததாக நெடுநல்வாடை கூறும்:

‘வாளைப் பருவாய் கடுப்ப வணக்குறுத்துச்

செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்து

-நெடுநல்; 143-44,

சுரு மீன் வடிவத்தில் அமைந்த மோதிரம் இன்றைய கெளிமோதிரத்தை ஒத்ததாகும். இதனை மகளிர் அணிந்த தாகக் கலித்தொகை,

  • கருவிதழ் கண்டன்ன செவ்விரற் கேற்பச்

சுறவே றெழுதிய மோதிரங் தொட்டாள்”

- கலி; 84; 23.33.

என்னும் அடிகளில் குறிப்பிடுகின்றது. தம் பெயரணிந்த மோதிரத்தினை அணியும் வழக்கமும் அன்றே இருந்தது என்பதனை,

“ நாம மோதிரங் தாள்முதற் செறித்து ‘

- பெருங்; 3 : 9 : 70,

என்னும் பெருங்கதைத் தொடர் கொண்டு அறியலாம். கால் விரல்களிலும் கான் என்னும் மோதிரங்களை மகளிர் அணிந்ததாக,