பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii O 'பாவரசர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு' என்ற ஆய்வுநூல் முனைவர் மு. இளங்கோவன் என்பாராலும் முடியரசன் படைப்புகள்- ஓர் ஆய்வு" என்ற நூல் முனைவர் சிரீகுமார் என்பாராலும் 'பூங்கொடியும் மணிமேகலையும்’ என்ற ஒப்பாய்வு நூல் முனைவர் மு. நிலாமணி என்பாராலும் எழுதப்பட்டு வெளி வந்துள்ளது. O கவியரசர் முடியரசனார் மு. த் த மி ழ் ம ன் ற ம்’ என்னும் பெயரில் புலவர் தி.மு. அரசு மாணிக்கம் என்பார், ஈரோட்டில் மன்றம் அமைத்துத் தமிழ்த் தொண்டு செய்துவருகிறார். பெற்ற பாராட்டுகள் : பாவேந்தர் வழித்தோன்றல், புதுமைக் கவிஞர். கவி மா மன்னர், கவிச் சிங்கம், இருபதாம் நூற்றாண்டின் இமயக் கவிஞர், கவிதை இமயம், தமிழ்த்தவம் கொண்ட தலைமைக் கவிஞர், தமிழ்க் குடியரசின் பாட்டு முடியரசர், கவியுலக முடியரசர், சுயமரியாதைக் கவிஞர். தமிழிசைப் பாவலர். வள்ளுவர் நெறியில் வாழ்ந்தவர். சொல்லும் செயலும் ஒத்த வாழ்வினர், வறுமையிலும் செம்மை போற்றியவர். திமிர்ந்த ஞானச் செருக்குடைய சங்கப் புலவரனையர், சங்கத் தமிழனைய துரயவர், பீடுநடையினர். பெருமித வாழ்வினர், நிமிர்ந்த நடையினர், நேர் கொண்ட பார்வையர், அண்டிப் பிழையார், ஆர்த்த வாழ்வினர், ஒட்டார் பின் செல்லாதவர், நல்லாசிரியர், ஆசிரியர் போற்றுபவர், நன்றி மறவாதவர், நட்புப் பெரிதென வாழ்ந்தவர், பகுத்தறிவாளர், மனித நேயர், பழகுதற்கினிய பண்பாளர், பிறர்க்குதவும் ஏந்தல், சாதி தொலைத்தவர். சமயம் அறுத்தவர், பதவி வெறுத்தவர், சமத்துவம் வி ரும்பி, விளம்பரம் விரும்பார், எளிமை வாழ்வினர்.